ட்விட்டரில் 1 மில்லியன் ஃபாலோயர்களைக் கடந்த சாய் பல்லவி

By செய்திப்பிரிவு

ட்விட்டரில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களைக் கடந்துள்ளார் சாய் பல்லவி.

தமிழகத்தில் பிறந்து, வளர்ந்த சாய் பல்லவி, ‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். நிவின் பாலி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், மலர் டீச்சராக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்.

பின்னர், துல்கர் சல்மான் ஜோடியாக ‘களி’ என்ற மலையாளப் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து ‘ஃபிடா’ என்ற தெலுங்குப் படத்தில் வருண் தேஜ் ஜோடியாகவும், ‘எம்சிஏ’ என்ற தெலுங்குப் படத்தில் நானி ஜோடியாகவும் நடித்தார்.

விஜய் இயக்கிய ‘தியா’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சாய் பல்லவிக்கு, அந்தப் படம் பெரிதாகப் போகவில்லை. தனுஷ் ஜோடியாக ‘மாரி 2’ படத்தில் நடித்துள்ள சாய் பல்லவி, தற்போது சூர்யா ஜோடியாக ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ட்விட்டரில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களைக் கடந்துள்ளார் சாய் பல்லவி. ‘ஒரு மில்லியன் அன்புக்கு மிகப்பெரிய நன்றி’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சாய் பல்லவி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

34 mins ago

ஜோதிடம்

41 mins ago

தமிழகம்

6 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

உலகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

11 hours ago

மேலும்