‘சில்லுனு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்கும் புதிய படத்துக்கு ‘ஹிப்பி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிப்பில் வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கியவர் கிருஷ்ணா. 2006-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. அதைத் தொடர்ந்து ஆரி, ஷிவதா நடிப்பில் வெளியான ‘நெடுஞ்சாலை’ படத்தை இயக்கினார்.
‘நெடுஞ்சாலை’ படத்தைத் தொடர்ந்து மறுபடியும் ஆரியை வைத்து ‘மானே தேனே பேயே’ என்ற படத்தை 2014-ம் ஆண்டு தொடங்கினார். இந்தப் படத்தில், ஹீரோயினாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் கீர்த்தி சுரேஷ். ஆனால், அவர் விலகிக்கொள்ள, சுபஸ்ரீ கங்குலி ஒப்பந்தமானார். இந்தப் படத்தின் தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை.
இந்நிலையில், ‘ஹிப்பி’ என்ற படத்தை இயக்குகிறார் கிருஷ்ணா. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.
கடந்த ஜூலை மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஆர்எக்ஸ் 100’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கார்த்திகேயா கும்மகொண்டா, இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
18 mins ago
தமிழகம்
20 mins ago
க்ரைம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
கல்வி
2 hours ago