பிரபுதேவா படத்தின் ஒளிபரப்பு உரிமையை வாங்கியது சன் டிவி

By செய்திப்பிரிவு

பிரபுதேவா நடித்துள்ள ‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.

பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சார்லி சாப்ளின் 2’. சக்தி சிதம்பரம் இயக்கிவரும் இந்தப் படத்தில், பிரபுதேவா ஜோடியாக நிக்கி கல்ராணி மற்றும் அதா ஷர்மா இருவரும் நடிக்கின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. அத்துடன், டிஜிட்டல் உரிமையையும் வாங்கியுள்ளது. இரண்டும் சேர்த்து 2.75 கோடி ரூபாய்க்கு சன் டிவி வாங்கியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. வருகிற 14-ம் தேதி இந்தப் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகவுள்ளது.

‘களவாடிய பொழுதுகள்’, ‘குலேபகாவலி’, ‘மெர்குரி’, ‘லக்‌ஷ்மி’ என இதுவரை 4 படங்கள் இந்த வருடம் பிரபுதேவா நடிப்பில் ரிலீஸாகிவிட்டன. ‘பொன் மாணிக்கவேல்’, ‘யங் மங் சங்’, ‘தேள்’, ‘காமோஷி’, ‘தேவி 2’ மற்றும் ‘சார்லி சாப்ளின் 2’ என 6 படங்கள் பிரபுதேவா கைவசம் இருக்கின்றன.

இதுதவிர, சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்க இருக்கும் ‘தபாங் 3’ படத்தின் ஷூட்டிங், அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்