மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் ‘சைக்கோ’

By செய்திப்பிரிவு

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்துக்கு ‘சைக்கோ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடித்த ‘கண்ணே கலைமானே’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. உதயநிதி ஜோடியாக தமன்னா நடித்துள்ள இந்தப் படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி நடித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில், அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். மதுரை, வாடிப்பட்டியைக் கதைக்களமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

‘கண்ணே கலைமானே’ படத்தைத் தொடர்ந்து தற்போது கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடித்து வருகிறார் உதயநிதி. இந்தப் படத்துக்குப் பிறகு, அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். மிஷ்கின் படத்தில் உதயநிதி ஜோடியாக அதிதி ராவ் நடிக்கிறார்.

இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘சைக்கோ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. வருகிற 6-ம் தேதி இந்தத் தலைப்பை அதிகாரபூர்வமாக வெளியிடும் படக்குழு, 7-ம் தேதியில் இருந்து சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்க இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்