நடிகர் சங்கத் தேர்தல்; இரு அணியினரும் கமல்ஹாசனுடன் சந்திப்பு

By செய்திப்பிரிவு

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் இரு அணியினரும் கமல்ஹாசனை தனித்தனியாக சந்தித்து ஆதரவு கேட்டனர்.

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வரும் 23-ம் தேதி நடக்க உள்ளது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து, பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி களமிறங்குகிறது. இரு அணிகளும் தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சங்கரதாஸ் அணியை சேர்ந்த கே.பாக்யராஜ், ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் நேற்று சந்தித்தனர்.

‘‘நடிகர் சங்கப் பொறுப்புக்கு இவர்கள் வரவேண்டும், அவர்கள் வரவேண்டும் என்பது முக்கியம் அல்ல. வருபவர்கள் யாராக இருந்தாலும், கட்டிடம் நல்லபடியாக வரவேண்டும். அதுதான் என் எண்ணம்’’ என்று கமல் தெரிவித்ததாக பாக்யராஜ் கூறினார்.

சங்கரதாஸ் அணியின் தேர்தல் அறிக்கையும் நேற்று வெளியிடப்பட்டது. ‘நடிகர் சங்க கட்டிடம் 6 மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும். மூத்த கலைஞர்களுக்கு மாதம்தோறும் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு வழங்கப்படும். ரூ.2 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வசதி செய்து தரப்படும்’ என்பது உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையில், பாண்டவர் அணி சார்பில் போட்டியிடும் விஷால் உள்ளிட்டோர் கமல் ஹாசனை நேற்று மாலை சந்தித்தனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், ‘‘நாங்கள் பொறுப்புக்கு வந்த பிறகு எதுவுமே செய்ய வில்லை என்று ராதிகா சரத்குமார் கூறியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் உறுப்பினர்கள் அனு பவிக்காத பல சலுகைகளை இந்த 3 ஆண்டு களில் வழங்கியுள்ளோம்” என்றார்.

இதற்கிடையில், தங்கள் அணி மற்றும் முந்தைய நிர்வாகிகளின் செயல்பாடுகளை மையமாகக் கொண்டுதான் வீடியோ ஒன்றை தயாரித்து பாண்டவர் அணி வெளியிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராதிகா வெளி யிட்டுள்ள அறிக்கையில், ‘‘விஷால், நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுகளை நிரூபித்தீர்களா” எனக் கேட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்