அறிவழகன் - நயன்தாரா படத்தைத் தயாரிக்கும் அறம் தயாரிப்பாளர்

By செய்திப்பிரிவு

நயன்தாரா நடிப்பில் அறிவழகன் இயக்க இருக்கும் புதிய படத்தை, 'அறம்' தயாரிப்பாளரான ராஜேஷ் தயாரிக்கிறார்.

'ஈரம்', 'வல்லினம்', 'ஆறாது சினம்' மற்றும் 'குற்றம் 23' படங்களை இயக்கியவர் அறிவழகன். அடுத்ததாக இவர் நயன்தாராவை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படம் சைக்காலஜிக்கல் த்ரில்லராக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தை, நயன்தாரா நடிப்பில் சூப்பர் ஹிட்டான 'அறம்' படத்தைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ராஜேஷ் தயாரிக்கிறார்.

படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ள அறிவழகன், நயன்தாரா தேதிகள் ஒதுக்கிய பின்னரே ஷூட்டிங் தேதி குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியரை வைத்தும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ள அறிவழகன், அவரிடம் கதையும் சொல்லிவிட்டார் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

41 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

5 hours ago

மேலும்