முழுக்க காதல் படமாக உருவாகும் ஆனந்த் ஷங்கர் - விஜய் தேவரகொண்டா படம்

By செய்திப்பிரிவு

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள புதிய படம் காதலைப் பின்னணியாகக் கொண்டு உருவாகவுள்ளது.

'அரிமா நம்பி', 'இருமுகன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் 'அர்ஜுன் ரெட்டி' ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய தமிழ் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. முழுக்க காதலைப் பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் ஷங்கர்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிய உள்ளார் சந்தானகிருஷ்ணன். இவர் இந்திய திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான ரவி கே.சந்திரனின் மகன்.

தற்போது இந்தியில் வெளியாக உள்ள 'பாஹி 2' படத்துக்கும் சந்தானகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் 'துருவ நட்சத்திரம்' படத்துக்குப் பிறகு ஆனந்த் ஷங்கர் - விஜய் தேவரகொண்டா படத்துக்கு ஒளிப்பதிவாளராக இவர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

6 hours ago

மேலும்