‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சிக்குப் பின்னர்தான் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்: கமல்ஹாசன் திட்டம்

By அபராசிதன்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சீஸன் 2-வைத் தொகுத்து வழங்கிய பின்னரே ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க கமல்ஹாசன் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள ‘விஸ்வரூபம் 2’ ரிலீஸுக்குத் தயாராகியுள்ளது. இந்தப் படத்துக்கு தணிக்கை வாரிய அதிகாரிகள் ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். அடுத்து, கமல் இயக்கி, நடித்துவந்த ‘சபாஷ் நாயுடு’ படத்தின் பணிகள் அப்படியே இருக்கின்றன.

இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் கமிட்டானார் கமல்ஹாசன். ‘பிக் பாஸ்’ மேடையிலேயே இந்தத் தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்தார். முதலில் தில் ராஜு தயாரிப்பதாக இருந்த இந்தப் படம், பின்னர் லைகா புரொடக்‌ஷன்ஸுக்கு கைமாறியது.

வருகிற கோடையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என தகவல் வெளியானது. ஆனால், மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், தற்போது அதைப் பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். அத்துடன், ‘பிக் பாஸ்’ சீஸன் 2-வையும் அவர் தொகுத்து வழங்கப் போகிறார்.

தற்போதைய நிலவரப்படி, ஜூன் 22 ஆம் தேதி ‘பிக் பாஸ்’ சீஸன் 2 தொடங்கப் போவதாகத் தெரிகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகே ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார் கமல்ஹாசன் என்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

மேலும்