சந்தானம் – எம்.ராஜேஷ் படத்தைத் தயாரிக்கிறது பிரபுதேவா ஸ்டுடியோஸ்

By அபராசிதன்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்தை பிரபுதேவா மற்றும் ஐசரி கணேஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.

எம்.ராஜேஷ் இயக்கிய ‘சிவா மனசுல சக்தி’ படத்தின் மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் சந்தானம். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என ராஜேஷ் இயக்கிய எல்லாப் படங்களிலும் பிரதான காமெடியனாக சந்தானம் தொடர்ந்தார். ஆனால், சந்தானம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதால், ராஜேஷ் கடைசியாக இயக்கிய ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் மட்டும் சந்தானம் நடிக்கவில்லை.

எனவே, சந்தானத்தை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்தார் எம்.ராஜேஷ். இந்தப் படத்தை, ‘மெர்சல்’ படத்தைத் தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், அவர்கள் பணநெருக்கடியால் இருப்பதால் படம் தொடங்குவது தாமதமாகி வருகிறது. எனவே, இந்தப் படத்தை பிரபுதேவா மற்றும் ஐசரி கணேஷ் இணைந்து பிரபுதேவா ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்