காரைக்குடியில் சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்

By செய்திப்பிரிவு

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடியில் நடைபெற உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற வெள்ளிக்கிழமை (மே 17) ரிலீஸாகும் படம் ‘Mr. லோக்கல்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தை, எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா இருவரும் ஹீரோயின்களாக நடிக்கும் இந்தப் படத்தில், அர்ஜுன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கும் கடந்த 8-ம் தேதி பூஜையுடன் தொடங்கியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார்.

இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்டி, ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘எஸ்.கே. 16’ என்று அழைக்கப்படுகிறது.

இதன் ஷூட்டிங், நாளை (மே 15) முதல் காரைக்குடியில் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இது கிராமத்துப் பின்னணியிலான கதை என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 min ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்