பாண்டியராஜ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் இணைந்த நீரவ்ஷா

By ஸ்கிரீனன்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'Mr.லோக்கல்' திரைப்படம் மே 17-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான கடைசி நேரப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு 'ஹீரோ' படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

மித்ரன் இயக்கி வரும் இப்படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரித்து வருகிறது.

'ஹீரோ' படம் தவிர்த்து, ‘இன்று நேற்று நாளை’ ரவிகுமார் இயக்கத்தில் உருவாகும் படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படம் எனவும் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். மேலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்திலும் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

இதற்கான படப்பிடிப்பு இடங்கள் தேர்வில் மும்முரமாகி இருக்கிறார் பாண்டிராஜ். இதன் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் நடிக்கவிருந்தாலும், சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக வேறொருவர் நடிக்கவுள்ளார். இதற்கான தேர்வும் தீவிரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

46 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்