காதலில் விழுந்த ஷபானா

By செய்திப்பிரிவு

கலைஞர் தொலைக்காட்சியில் ‘நம்ம வீட்டு நட்சத்திரம்’ என்ற நிகழ்ச்சியை வழங்கி, நேயர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறார் தொகுப்பாளினி ஷபானா.

‘‘எப்பவுமே அரங்கு சூழ் ஏரியாவில் நிகழ்ச்சியை வழங்குறோமே.. ஒரு மாற்றத்துக்கு சினிமா, சீரியல் பிரபலங்கள் வீட்டுப் பக்கம் போய் பார்த்துட்டு வரலாமேன்னு சேனல்ல ஓர் ஐடியாவை தட்டிவிட்டேன். அது கிளிக் ஆக, இப்போ நிகழ்ச்சிக்கு செம வரவேற்பு. அதிலும் குறிப்பாக, யூ-டியூபில் மட்டும் 8 லட்சம் பேர் பார்க்குற அளவுக்கு பரபரப்பா போய்க்கிட்டிருக்கு.

இந்த நிகழ்ச்சியில் இதுவரை விஜயலட்சுமி, சந்தோஷின்னு பிரபலங்களை பார்த்திருக்கோம். அவங்களோட வீட்டுக்குப் போய் சுற்றிப் பார்ப்பது, குடும்பத்தினரை அறிமுகம் செய்வது, அவங்க சமைக்கிறதை ருசிபார்ப்பது, அவங்களோடு சேர்ந்து ஷாப்பிங் போறதுன்னு நாள் முழுக்க ஜாலியா நகரும். இது நான் கொடுத்த ஐடியா என்பதால், இன்னும் பெருமையா இருக்கு’’ என்கிறார் ஷபானா.

‘‘நீங்கள் ஏதோ காதலில் விழுந்ததாக காற்றுவாக்கில் சேதி வருகிறதே?’’ என்று கேட்டதற்கு, ‘‘ஆமாங்க. நெசமாவே லவ்ல விழுந்துட்டேன். வீட்ல இன்னும் ஓ.கே. சொல்லல. அவர் சேனல் நிகழ்ச்சி இயக்குநர். விரைவில் படம் இயக்குவதற்கான வேலைகளும் நடந்திட்டுருக்கு. வீட்ல சம்மதம் வாங்கிட்டு அவரைப் பற்றி சொல்லலாம்னு அமைதியா இருக்கேன்’’ என்கிறார் ஷபானா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

11 mins ago

உலகம்

32 mins ago

வாழ்வியல்

51 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

மேலும்