சிவாஜியுடன் விஜய் சேதுபதி ஒப்பீடு: இயக்குநர் சேரன் விளக்கம்

By ஸ்கிரீனன்

சிவாஜியுடன் நடிகர் விஜய் சேதுபதியை ஒப்பிட்டது தொடர்பாக இயக்குநர் சேரன் விளக்கம் அளித்துள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூப்பர் டீலக்ஸ்'. திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி விமர்சகர்கள் பலரும் இப்படத்தைக் கொண்டாடினாலும், வசூல் ரீதியாக இப்படம் பெரும் வரவேற்பைப் பெறவில்லை.

இப்படம் தொடர்பாக இயக்குநர் சேரன் வெளியிட்ட ட்வீட்டில், ''முதலில் திருநங்கையாக நடிக்க சம்மதித்தது. அதிலும் திருநங்கைகளின் மறைக்கப்பட்ட தோற்றத்தை அப்படியே கண்முன் கொண்டுவர சம்மதித்து ஒப்பனையில் காட்டியது. தன்னைப் பற்றிய இமேஜ் பற்றி கவலைப்படாமல் தன் தொழில், திறமை மீது மட்டும் நம்பிக்கை வைத்த அந்த நடிகன்.. சல்யூட் விஜய் சேதுபதிக்கு. இன்னொரு சிவாஜி'' என்று குறிப்பிட்டார்.

இந்த ட்வீட் சிவாஜி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைப் புரிந்துகொண்டு சிவாஜி - விஜய் சேதுபதி ஒப்பீட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர் சேரன்.

இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ''விஜய் சேதுபதியை மரியாதைக்குரிய சிவாஜியுடன் ஒப்பிட்டது கதாபாத்திரங்களை எந்த இமேஜும் பார்க்காமல் தேர்ந்தெடுக்கும் விதத்திலும் அதற்காக இயக்குநரின் தேவை அறிந்து மெனக்கெடும் விதத்திலும்தான் ஒப்பிட்டேன்..  மற்றபடி சிவாஜிக்கு இணையாக குறிப்பிடவில்லை.. அது அவருக்கும் தெரியும்'' என்று சேரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

ஓடிடி களம்

7 mins ago

விளையாட்டு

22 mins ago

சினிமா

24 mins ago

உலகம்

38 mins ago

விளையாட்டு

45 mins ago

ஜோதிடம்

27 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்