ரஜினியின் மகளாக நடிக்கும் நிவேதா தாமஸ்

By செய்திப்பிரிவு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில், ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு, வரும் 10-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில்  தயாரிக்கவுள்ள இப்படத்துக்கான போட்டோஷுட், சமீபத்தில் நடைபெற்றது.

இந்த போட்டோஷுட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இணையத்தில் நேற்று முன்தினம் லீக்கானதால், படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

லீக்கான இந்தப் புகைப்படங்களின் மூலம், போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்தப் புகைப்படங்களில் போலீஸ் உடையின் மேல் பிரவுன் நிற கோட்டு போட்டுக் கொண்டு, கையில் கத்தியுடன் ரஜினி கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். இதில், ரஜினி இளமையாகவும் தெரிகிறார்.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும், மகளாக நிவேதா தாமஸும் நடிக்கவுள்ளனர். நிவேதா தாமஸ், ‘பாபநாசம்’ படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்