சந்தானத்தின் A 1 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By ஸ்கிரீனன்

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள 'A 1' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தில்லுக்கு துட்டு 2'. இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் நடித்து வந்தார் சந்தானம். இப்படத்தை ராஜ் நாராயணன் தனது சர்க்கிள் பாக்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த இப்படத்துக்கு 'A 1' என்று பெயரிட்டுள்ளனர். தலைப்புக்கு கீழே 'Accused No. 1' என்று குறிப்பிட்டுள்ளது படக்குழு.

தாரா அலிஷா நாயகியாக நடித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கோபி ஜெகதீஷ்வரன் ஒளிப்பதிவாளராகவும், லியோ ஜான் பால் எடிட்டராகவும் பணிபுரிந்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு படுதீவிரமாக சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்