தவறான கருத்துக்கு கைதட்டி ஆதரவு கொடுப்பதை நிறுத்தவேண்டும்: ஸ்ரீப்ரியா

By செய்திப்பிரிவு

தவறான கருத்துக்கு கைதட்டி ஆதரவு கொடுப்பதை நிறுத்தவேண்டும் என நடிகை ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.

'கொலையுதிர் காலம்' பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ராதாரவியின் பேச்சு பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலினும் ராதாரவியின் பேச்சுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து தனது கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் நடிகை ஸ்ரீப்ரியா.

“பேச்சாளர்களுக்கு உள்ள கடமை, பார்வையாளர்களுக்கும் இருக்க வேண்டும். தவறான கருத்துக்கு கைதட்டி ஆதரவு கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும். இதனால், வாய்துடுக்கான விமர்சனங்கள் தவிர்க்கப்படும்” என ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த ட்வீட்டில் என்ன விஷயம் எனக் குறிப்பிடவில்லை. இருந்தாலும், நயன்தாரா - ராதாரவி விஷயத்தில், ராதாரவி பேசியபோது அங்கிருந்தவர்கள் கைதட்டியதையே அவர் குறிப்பிட்டுள்ளார் என்று அந்த ட்வீட்டின் கமென்டில் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

24 mins ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்