விஷாலின் ‘அயோக்யா’ ரிலீஸ் தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

விஷால் நடித்துள்ள ‘அயோக்யா’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

‘சண்டக்கோழி 2’ படத்துக்குப் பிறகு விஷால் நடித்துள்ள படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ராஷி கண்ணா, பார்த்திபன், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது. லகரி மியூஸிக் நிறுவனம் இதன் இசை உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

கோடை விடுமுறையை முன்னிட்டு, ஏப்ரல் 19-ம் தேதி 'அயோக்யா' வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால், இன்னும் ஒரு பாடல் படமாக்கப்படவில்லை. முதலில் சன்னி லியோன் இந்தப் பாடலுக்கு நடனமாடுவதாக இருந்தது.

ஆனால், தேதிகள் பிரச்சினை மற்றும் சம்பளம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அவரை நீக்கியது படக்குழு. பின்னர், ஷ்ரத்தா தாஸ் ஆடுவதாகக் கூறப்பட்டது. இப்போது அவரும் இல்லை எனத் தகவல் கிடைத்துள்ளது. அவருக்குப் பதிலாக சனா கான் நடனமாட இருக்கிறார்.

மேலும், விஷாலுக்கும், ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிஷா ரெட்டிக்கும் நாளை (மார்ச் 16) திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. திருமண வேலைகளில் விஷால் பிஸி மற்றும் பாடல் படமாக்கப்படாததால், ரிலீஸ் தள்ளிப் போகிறது.

எனவே, ஏப்ரல் 19-ம் தேதி ரிலீஸாவதாக இருந்த ‘அயோக்யா’வை, மே 10-ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டு வருகிறது படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

தொழில்நுட்பம்

16 mins ago

இந்தியா

5 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்