தொடர் சர்ச்சையில் 90 எம்.எல்: சமூக வலைதளங்களில் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

'90 ML' படத்தின் டீஸரைத் தொடர்ந்து, தற்போது வெளியிடப்பட்டுள்ள SNEAK PEEK வீடியோவுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள படம் '90 எம்.எல்'. பிப்ரவரி 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்துக்கு சிம்பு இசையமைத்துள்ளார். படத்துக்கு தணிக்கையில் 'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான போது, அதிலிருந்த காட்சிகள், வசனங்கள் முழுக்க ஆபாசமாகவும், இரட்டை அர்த்த வசனம் கொண்டதாகவும் இருப்பதாக நெட்டிசன்களும், தமிழ் சினிமா ஆர்வலர்களும் கடுமையாக விமர்சித்தனர்.

பிப்ரவரி 1-ம் தேதி வெளியாகவுள்ளதால, படத்தின் SNEAK PEEK ஒன்றை வெளியிட்டது படக்குழு. அதிலும் பழங்களை வைத்து ஓவியா பேசும் வசனம், பெண்களை ஆபாசமாகச் சித்தரிப்பதாக உள்ளது.

இந்த SNEAK PEEK லிங்க்கிலேயே பலரும் கடுமையாக படக்குழுவினரைச் சாடியுள்ளனர். இக்காட்சிகளுக்கு எல்லாம் தணிக்கைக் குழு எப்படி அனுமதியளித்தது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ட்ரெய்லர் சர்ச்சை எழுந்த போது ஓவியா தன் ட்விட்டர் பக்கத்தில், ''பழத்தைச் சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள். முழு படத்தையும் பார்க்கும் வரை காத்திருங்கள்'' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்