விஜய் ஆண்டனிக்கு நாயகியாக ரம்யா நம்பீசன் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

விஜய் ஆண்டனி நடித்து வரும் 'தமிழரசன்' படத்தின் நாயகியாக ரம்யா நம்பீசன் நடித்து வருகிறார்.

'திமிரு புடிச்சவன்' படத்தைத் தொடர்ந்து 'கொலைகாரன்', 'அக்னி சிறகுகள்', 'தமிழரசன்' ஆகிய படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இதில் 'தமிழரசன்' படத்தினை பாபு யோகேஸ்வரன் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நாயகியை ஒப்பந்தம் செய்யாமல், படப்பிடிப்பைத் தொடங்கியது படக்குழு. கதைக்குத் தகுந்தாற் போல் பல்வேறு நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக ரம்யா நம்பீசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, விஜய் ஆண்டனிக்கும் அவருக்குமான காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறது படக்குழு. மேலும், 1000 கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் சமீபத்தில் படமாக்கியுள்ளனர்.

பூமிகா, யோகி பாபு, ரோபோ ஷங்கர், முனீஸ்காந்த் உள்ளிட்டோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவும் இப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தொடர்ச்சியாக சென்னையில் நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்