எல்.கே.ஜி அப்டேட்: தணிக்கைக் குழுவினரின் ஆட்சேபத்தால் காட்சி நீக்கம்

By ஸ்கிரீனன்

'எல்.கே.ஜி' படத்தில் சந்தான பாரதியின் காட்சிக்கு தணிக்கைக் குழுவினர் ஆட்சேபம் தெரிவித்தததால் அக்காட்சியை படக்குழு நீக்கியுள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் 'எல்.கே.ஜி'. பிப்.22-ம் தேதி வெளியாகியுள்ள இப்படத்தில் ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பலர் ஆர்.ஜே.பாலாஜியுடன் நடித்துள்ளனர்.

பிரபு இயக்கியுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதி இருக்கிறார். ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார். 'எல்.கே.ஜி' படத்துக்கான ட்ரெய்லர் வெளியான போது, அதில் கடைசியில் மோடியின் பிட்னஸ் சேலஞ்சை கிண்டல் செய்து முடித்திருப்பார்கள். 'I Challenge Kajal Agarwaal' என்று சந்தானபாரதி சொல்வதோடு 'எல்.கே.ஜி' ட்ரெய்லர் முடிவடையும்.

ட்ரெய்லரில் இடம்பெற்ற அக்காட்சிகள் எதுவுமே, படத்தில் இடம்பெறவில்லை. படத்தின் நீளம் கருதி தூக்கிவிட்டார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இதற்கு கூறப்பட்டன. ஆனால் நிஜத்தில், படத்தின் தணிக்கையின் போது இக்காட்சிகளுக்கு தணிக்கை அதிகாரிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இதனால் பிட்னஸ் சேலஞ்ச் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் படக்குழு நீக்கியுள்ளது.

மேலும், 'எல்.கே.ஜி' படத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாளில் சுமார் 2.5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு மற்றும் கோயம்புத்தூர் பகுதி திரையரங்குகளில் நல்ல வசூல் செய்து வருகிறது. மக்கள் கொடுத்துள்ள இந்த வரவேற்பால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

16 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்