வீரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப என் பிரார்த்தனைகள் - நடிகர் கார்த்தி உருக்கம்

By செய்திப்பிரிவு

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள நமது ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப தான் பிரார்த்திப்பதாக நடிகர் கார்த்தி கூறியுள்ளார். 

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்தியது. 

இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் சென்ற இந்திய மிக் ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் இரு இந்திய  விமானிகளைக் கைது செய்துள்ளதாகப் பாகிஸ்தான் ராணுவம் தெரிவிக்கிறது. இதில் ஒருவர் விமானி காமாண்டர் அபிநந்தன்.

அபிநந்தனை பத்திரமாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் என திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் கோரிக்கைகளை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். 

நடிகர் கார்த்தி, "இந்திய விமானப் படையைச் சேர்ந்த சில ஃபைட்டர் பைலட்டுகளை என் வாழ்வில் சந்தித்தது எனது அதிர்ஷ்டமே. அவர்களைத் தெரிந்து கொண்டது உண்மையில் ஒரு பெருமை. அவர்கள் முற்றிலும் வித்தியாசமான களத்தில் இயங்கும் மனிதர்கள். நமது வீரர்கள் பாதுகாப்பாக திரும்ப பிரார்த்திக்கிறேன். நமது ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக நமது ஒட்டு மொத்த தேசமும் நிற்கிறது. அவர்களின் துணிந்த இதயமும், தியாகமும் தான் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை திரைப்படத்தில், கார்த்தி இந்திய விமானப் படை பைலட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் அவரது கதாபாத்திரம் அண்டை நாட்டு ராணுவத்திடம் சிக்கி மீள்வாதாக கதை அமைக்கப்பட்டிருக்கும். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 mins ago

ஆன்மிகம்

24 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்