கார்த்தியின் ‘உழவன் அறக்கட்டளை’: விவசாயிகளுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி

By செய்திப்பிரிவு

கார்த்தியின் உழவன் அறக்கட்டளை, விவசாயிகளுக்கு 5 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இந்தப் படத்தில் விவசாயி கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்தார். இந்தப் படத்துக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. வசூலிலும் சாதனை படைத்தது.

இந்தப் படத்தின் தாக்கத்தால், ‘உழவன் அறக்கட்டளை’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார் கார்த்தி.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், “அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். உங்கள் குடும்பங்களில் சந்தோஷமும் ஆரோக்கியமும் பெருக வேண்டுமென ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்குப் பிறகு விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எல்லாருக்குமே இருந்தது. அதனால், ‘உழவன் அறக்கட்டளை’ என்ற புது அமைப்பை ஆரம்பித்துள்ளோம். அதன் முதல் விதையாக, அண்ணன் சூர்யா ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.

அத்துடன், ‘உழவன் விருதுகள்’ என்பதையும் இந்த வருடம் தொடங்கியுள்ளோம். விவசாயத்தையும் விவசாயிகளையும் போற்றும் வகையில், அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்த விருதுகள் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நட்புடன் இந்த வருடம் உழவன் விருதுகள் வழங்கப்பட்டன.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளானதால், அங்கு இயற்கை விவசாயத்தை லாபகரமாகச் செய்து கொண்டிருந்த விவசாயிகள் 5 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர். அந்த நிகழ்ச்சி இன்று (ஜனவரி 15) தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. அதற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன.

இது உழவன் அறக்கட்டளையின் முதல்படி மட்டுமே. உங்கள் ஆசிர்வாதத்துடனும் அன்புடனும் இது இன்னும் பெரிதாக வளர வேண்டும். இதனால், பல விவசாயிகளும் பலன் அடைய வேண்டும். நுகர்வோராய் இருக்கும் நாம், அவர்களுக்கு என்ன நன்றிக்கடன் செய்ய வேண்டுமோ, அதை நிச்சயமாய் செய்தே தீரவேண்டும். அதற்கு முதல்படியாய் இதை ஆரம்பித்துள்ளோம். உங்கள் நட்புடன் இது இன்னும் பெரிதாக வளர வேண்டும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்