இந்தியன் 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: ஜனவரி 18-ல் படப்பிடிப்பு துவக்கம்

By செய்திப்பிரிவு

‘இந்தியன் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும், ஜனவரி 18-ம் தேதி படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவித்துள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’.அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது.

இப்படம்தான் கமல் - ஷங்கர் இணைந்து பணியாற்றிய கடைசிப் படம். 22 வருடங்கள் கழித்து, ‘இந்தியன் 2’ இருவரும் மறுபடி இணைந்திருக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கமலின் பிறந்த நாளின் போது, இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா.

தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'இந்தியன் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் 'இந்தியன்' படத்தில் கமல் செய்யும் வர்மக் கலைகள் மிகவும் பேசப்பட்டது. அதை முன்வைத்து 'இந்தியன் 2' போஸ்டரை வடிவமைத்துள்ளது படக்குழு. மேலும், ஜனவரி 18-ம் தேதி படப்பிடிப்பு துவங்கும் என்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அறிவித்துள்ளனர்.

இப்படத்துக்காக தனது அரசியல் பணிகளுக்கு இடையே, உடலமைப்பை மாற்றியமைக்கும் பணியிலும் கவனம் செலுத்தி வருகிறார் கமல். படப்பிடிப்புக்காக அரங்கம் அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் கலை இயக்குநர் முத்துராஜ்.

எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’வுக்கான வசனங்களை எழுதியுள்ளனர். கமலுடன் காஜல் அகர்வால் நடிக்க ஒபப்ந்தம் செய்யப்பட்டுள்ளார். வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யவில்லை.

ஒளிப்பதிவாளராக ரவிவர்மான் பணிபுரியவுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ஷங்கர் - அனிருத் இணையும் முதல் படமாக 'இந்தியன் 2' அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்