‘காஞ்சனா’ இந்தி ரீமேக்: ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்‌ஷய் குமார்

By செய்திப்பிரிவு

‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கில், ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான படம் ‘காஞ்சனா’ (‘முனி 2’). ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், திருநங்கை கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்தார். ஹீரோயினாக ராய் லட்சுமி நடிக்க, கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

2011-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. ராகவா லாரன்ஸ் தயாரித்த இந்தப் படத்தை, ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் வெளியிட்டது. காமெடி பேய்ப்படமான இது, சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக, குழந்தைகளுக்கு இந்தப் படம் மிகவும் பிடித்தது.

8 வருடங்களுக்குப் பிறகு ‘காஞ்சனா’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. ராகவா லாரன்ஸே இந்தியிலும் இயக்குகிறார். இதன்மூலம் பாலிவுட்டில் காaaலடி எடுத்து வைக்கிறார் ராகவா லாரன்ஸ்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்‌ஷய் குமார், ராகவா லாரன்ஸ் வேடத்தில் நடிக்கிறார். சரத்குமார் வேடத்தில் நடிக்க மற்றொரு முன்னணி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.

படத்தின் மற்ற நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்