விஸ்வாசம் பாடல் வெளியீடு: இணையத்தில் கிண்டலுக்கு ஆளான அஜித் ரசிகர்கள்

By செய்திப்பிரிவு

டேல் ஸ்டெய்ன் ட்வீட்டுக்குத் தொடர்ச்சியாக பதிலளித்து, கிண்டலுக்கு ஆளாகியுள்ளனர் அஜித் ரசிகர்கள்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்'. பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ள இப்படத்தின் 'அடிச்சுத் தூக்கு' என்ற பாடல் நேற்று (டிசம்பர் 10) இணையத்தில் வெளியானது. இப்பாடலை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதே வேளையில், மற்றவர்களும் இதெல்லாம் பாடலா என்று கிண்டலும் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் நேற்று (டிசம்பர் 10) மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் "ட்விட்டரில் என்ன நடக்கிறது" என்று பதிவிட்டார். அப்போது, 'விஸ்வாசம்' படத்தின் 'அடிச்சுத்தூக்கு' என்ற பாடல் இரவு 7 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு மட்டுமே வெளியாகியிருந்தது.

இந்த அறிவிப்பை வைத்துக் கொண்டு, அஜித் ரசிகர்கள் பலரும் டேல் ஸ்டெய்ன் ட்வீட்டுக்குப் பதிலளிக்கத் தொடங்கியுள்ளனர். இது பலராலும் கிண்டல் செய்யப்பட்டது. அவரது ட்வீட்டை ரீ-ட்வீட் செய்த அளவுக்கு, அதற்கு பதிலும் அளித்தார்கள்.

தென்னாப்பிரிக்கா அணியின் வேகப் பந்து வீச்சாளரிடம் ஏன் அஜித்தின் பாடலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று ட்விட்டர் பக்கத்தில் பலரும் கிண்டல் செய்தனர். டேல் ஸ்டெய்ன் ட்வீட்டுக்கு பல அஜித் ரசிகர்கள் பதில் உங்களுடைய பார்வைக்கு...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்