ஹன்சிகாவின் ‘மஹா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

ஹன்சிகா நடிப்பில் உருவாகும் 50-வது படமான ‘மஹா’ ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்திப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, திரையுலகில் அறிமுகமானவர் ஹன்சிகா. ‘மாப்பிள்ளை’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதுவரை 49 படங்களில் நடித்துள்ள ஹன்சிகா, தனது 50-வது படத்தை புதுமுக இயக்குநர் ஜமீல் இயக்குவார் என்று அறிவித்தார். ‘மஹா’ எனப் பெயரிடப்பட்ட இப்படத்தை, எக்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் தயாரிக்க முன்வந்தது.

பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று (டிசம்பர் 9) வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் இந்து, முஸ்லிம் எனப் பல கெட்டப்களில் ஹன்சிகா இருப்பது போல வடிவமைத்துள்ளனர்.

ஹன்சிகாவின் 50-வது படம் என்பதால், பலரும் ‘மஹா’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப்படம், அடுத்த ஆண்டு (2019) வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

வேலை வாய்ப்பு

33 mins ago

தமிழகம்

48 mins ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

52 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

மேலும்