ரஜினிக்கு பெஸ்ட் ஜோடி யார்? நடிகை சிம்ரன் பதில்

By செய்திப்பிரிவு

ரஜினி நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.  ரஜினியுடன் இணைந்து நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று (டிசம்பர் 9) சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகை சிம்ரன், “ரஜினி சாருடன் நடித்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம். எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசாத்தான் இந்த வாய்ப்பை நினைக்கிறேன். 15 வருடங்களுக்கு முன்னாடியே இருவரும் இணைந்து நடிக்க வேண்டியது. ஆனால், அப்போது அதை மிஸ் பண்ணிட்டேன்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ரஜினி சாருடன் இணைந்து நடிப்பேன் என்ற நம்பிக்கையே போய்விட்டது. ஆனால், திடீரென என் பிறந்தநாளுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வாழ்த்தினார். அப்போது, ‘ரஜினி சார் ஜோடியாக நீங்கள் நடிக்க வேண்டும்’ என்றார். நான் அதை முதலில் நம்பவில்லை. என்னுடன் விளையாடுகிறார்கள் என்றே நினைத்தேன். ஆனால், அது உண்மையாகிவிட்டது.

சின்ன வயதில் இருந்தே ரஜினி சாரின் நிறைய படங்களைப் பார்த்திருக்கிறேன். தமிழ் மட்டுமின்றி, இந்திப் படங்களும் பார்த்திருக்கிறேன். அவருடைய ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய ட்ரெஸ், அந்தக் கண்ணாடிய அவர் மாட்டுகிற ஸ்டைல், டான்ஸ், நடிப்பு என எல்லாமே பிடிக்கும். இங்க நான் நடிகை சிம்ரனாகப் பேசவில்லை. ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகையாகத்தான் பேசுகிறேன்” என்றார்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நக்‌ஷத்ரா, ‘மீனா, குஷ்பூ, சிம்ரன் - இந்த மூன்று பேரில் யார் ரஜினி சாருக்கு பெஸ்ட் ஜோடி?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, ‘நான் தான் பெஸ்ட் ஜோடி’ என்று சிரிப்புடன் பதிலளித்த சிம்ரன், “என்னால் 15, 20 வருடங்களுக்கு முன்னாடி திரும்பிப் போக முடியும் என்றால், ரஜினி சாரின் எல்லா ஹீரோயின்களையும் நீக்கிவிட்டு, எல்லாப் படங்களிலும் நானே ஹீரோயினாக நடித்திருப்பேன்” என்றார்.

‘சந்திரமுகி’ மாதிரி நடித்துக் காட்ட முடியுமா? என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் விக்னேஷ்காந்த் கேட்க, உடனடியாக ‘ரா... ரா...’ பாடலுக்கு நடனமாடி அசத்தினார் சிம்ரன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

சுற்றுச்சூழல்

38 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்