பிங்க் ரீமேக்கில் அஜித் எப்படி? எப்போது வெளியீடு? - படக்குழுவினர் விளக்கம்

By ஸ்கிரீனன்

அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தை ஹெச்.வினோத் இயக்கவுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

'விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியானது. இப்படம் 'பிங்க்' ரீமேக் என பல தகவல்கள் வெளியானாலும், படக்குழுவினரோ எதையுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 14) காலை படப்பூஜை நடைபெற்றது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள். மாலையில், இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது படக்குழு.

ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து அஜித் படத்துக்கு இசையமைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் யுவன். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிந்தவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் கூறியிருப்பதாவது:

'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் அஜித்துடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் படம் நடிக்க வேண்டும் என ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை ஒன்றும் கிடைக்கவில்லை. ஒரு நாள் அஜித் 'பிங்க்' படத்தை ரீமேக் செய்யும் எண்ணத்தை தெரிவித்தார். அஜித் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என ஸ்ரீதேவியும் உடனடியாக அந்த எண்ணத்தை ஏற்றுக்கொண்டார்.

தென்னிந்திய சினிமா துறையில், குறிப்பாக தமிழ் சினிமாவில் சினிமா தயாரிப்பை மேற்கொள்வதை நான் பெருமையாக கருதுகிறேன். அஜித் என் மனைவி ஸ்ரீதேவியுடன் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் நடித்த காலத்தில் இருந்தே நானும் அஜித்தும் ஒரு படத்தில் இணைய மிகுந்த ஈடுபாட்டுடன்  காத்திருந்தோம். நாங்கள் இருவருமே எங்கள் இருவரது கேரியரிலும் சிறப்பு சேர்க்கும் ஒரு பொருத்தமான கதையை தேடினோம்.

'பிங்க்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கில் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்று (டிசம்பர் 14) படப்பிடிப்பை துவங்கி, 2019-ம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இன்னொரு படத்தையும் தயாரிக்கிறோம். அது 2019 ஜூலையில் துவங்கி, 2020 ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிடப்படும். இரண்டு படங்களும் ஜீ நிறுவனம் ஆதரவுடன் தயாராகின்றன. அவருடன் பணிபுரியும் மிகச்சிறந்த  அனுபவத்தை நான் எதிர்பார்க்கிறேன்.

இயக்குனர் வினோத்தின் படைப்புகளை நான் பின்பற்றி வருகிறேன், மிகச்சிறந்த திரைப்படங்களை கொடுத்து வருகிறார். குறிப்பாக, அவரது முந்தைய படமான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை மிகவும் யதார்த்தமாக எடுத்திருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர் தான் தமிழ் மொழியில் 'பிங்க்' படத்தை இயக்க சரியான நபராக இருப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு போனி கபூர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

ஜோதிடம்

32 mins ago

தமிழகம்

22 mins ago

விளையாட்டு

41 mins ago

சினிமா

42 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்