டிச.14-ல் படப்பிடிப்பு தொடக்கம்; வெளிநாட்டில் காஜலுக்கு மேக்கப் டெஸ்ட் - இந்தியன் 2 அப்டேட்ஸ்

By செய்திப்பிரிவு

'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக காஜல் அகர்வாலுக்கு வெளிநாட்டில் மேக்கப் டெஸ்ட் நடைபெற்றுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது.

இப்படம்தான் கமல் - ஷங்கர் இணைந்து பணியாற்றிய கடைசிப் படம். 22 வருடங்கள் கழித்து, ‘இந்தியன் 2’ இருவரும் மறுபடி இணைந்திருக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கமலின் பிறந்த நாளின் போது, இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா.

தற்போது '2.0' படம் வெளியாகிவிட்டதால், முழுமையாக 'இந்தியன் 2' படத்தில் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.  இப்படத்துக்கான அரங்குகள் அமைக்கும் பணி நவம்பர் 12-ம் தேதி தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'தளபதி 63' மற்றும் 'இந்தியன் 2' ஆகிய இரண்டு படங்களுக்கான அரங்குகள் பணிகளை ஒரே சேர கவனித்து வருகிறார் கலை இயக்குநர் முத்துராஜ்.

இப்படத்துக்காக 'இந்தியன்' படத்தின் தாத்தா கெட்டப்பை மீண்டும் கமலுக்கு போட்டுப் பார்த்திருக்கிறார் ஷங்கர். அதை வைத்து ஒரு போட்டோஷூட்டையும் முடித்துவிட்டார். மேலும், மீண்டும் 'இந்தியன் ' தாத்தா கெட்டப்பில் கமலைப் பார்த்த போது சிலிர்த்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார் ஷங்கர்.

காஜல் அகர்வால் ஒரு முக்கிய கதாபாத்திரத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கான பிரத்யேக மேக்கப் டெஸ்ட் வெளிநாட்டில் நடைபெற்றுள்ளது. முதன்முறையாக ஷங்கர் இயக்கத்தில் கமலுடன் நடிக்கவுள்ளதால், மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார் காஜல் அகர்வால். கமல் - காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் நடைபெற்று வரும் அரங்கிலேயே முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

மேலும், கமலுடன் நடிக்கும் இதர நடிகர்களையும் தேர்வு செய்துவிட்டார். இதன் முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. படப்பிடிப்பு தொடங்கப்படும் போது, படப்பூஜை படங்களுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’வுக்கான வசனங்களை எழுதியுள்ளனர். ஒளிப்பதிவாளராக ரவிவர்மான் பணிபுரியவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

41 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

வணிகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

க்ரைம்

12 hours ago

மேலும்