தர்மபிரபு ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: எமனாக நடிக்கும் யோகிபாபு - வைரலாகும் போஸ்டர்

By செய்திப்பிரிவு

முத்துகுமரன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கவுள்ள ‘தர்மபிரபு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பல்வேறு படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாகவும், அதிகமான படங்களின் வெளிநாட்டு உரிமை மற்றும் தொலைக்காட்சி உரிமையையும் வாங்கி வியாபாரம் செய்தவர் பி.ரங்கநாதன். முதல் முறையாக தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார்.

விமல், வரலட்சுமி நடிப்பில் உருவாகிவரும் ‘கன்னிராசி’ படத்தை இயக்கி வருபவர் முத்துகுமரன். இவர் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, முதல் படம் வெளியாவதற்குள் இரண்டாவது படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

‘தர்மபிரபு’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு இருக்கிறது படக்குழு. இந்தப் போஸ்டர் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட்டாகி வருகிறது. காரணம், இதில் யோகிபாபு எமனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறது. போஸ்டருமே அவரை எமனாக உட்கார்ந்திருப்பது போலவே அமைத்திருக்கிறது படக்குழு.

எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. அது வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், சித்ரகுப்தனாக பதவி வகித்துவரும் கருணாகரன் பதவி அடிப்படையிலும் எமனுக்கு போட்டி போடுகிறார்கள். இதில் யார் எமன் பதவியை தட்டி செல்கிறார்க, தன் தகுதியை எப்படி நிரூபித்து கொள்ளப் போகிறார்கள் என்பதே ’தர்மபிரபு’ படத்தின் கதையாகும்.

யோகிபாபு மற்றும் கருணாகரன் இணைந்து நடிக்கவுள்ளார்கள். இதற்காக சென்னையிலுள்ள ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான அரங்குகளை அமைக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டு இருக்கிறது. இதர நடிகர், நடிகைகள் தேர்வும் மும்முரமாக நடந்து வருகிறது.

டிசம்பர் மாதம் முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. முழுக்க சென்னையில் பிரதான காட்சிகளை படமாக்கிவிட்டு, வெளிநாட்டில் பாடல்களை படமாக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளராக மகேஸ் முத்துசாமி, எடிட்டராக சான் லோகேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்