ரஜினி படத்துடன் ரிலீஸாகும் சிம்பு படத்தின் டீஸர்

By செய்திப்பிரிவு

ரஜினி நடிப்பில் நாளை (நவம்பர் 29) ரிலீஸாகும் படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படம், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாகும். ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்க, வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முழுவதும் 3டி-யில் படம்பிடிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியாகிறது.

‘2.0’ படத்துடன், சிம்பு நடித்துவரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் டீஸர் ஒளிபரப்பாக உள்ளது. சுந்தர்.சி இயக்கிவரும் இந்தப் படம் ‘அத்தரண்டிகி தாரேதி’ தெலுங்குப் படத்தின் ரீமேக். சிம்பு ஜோடியாக கேத்ரின் தெரேசா, மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

நாளை (நவம்பர் 29) முதல், ‘2.0’ தியேட்டரில் ஓடும்வரை இந்த டீஸரும் ஒளிபரப்பாகும். காரணம், இரண்டு படங்களின் தயாரிப்பாளரும் லைகா புரொடக்‌ஷன்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்