பேட்ட உடன் போட்டி; பின்வாங்கல் இல்லை: ‘விஸ்வாசம்’ படக்குழு முடிவு

By செய்திப்பிரிவு

'பேட்ட' வெளியானாலும், கண்டிப்பாகப் பின்வாங்கப் போவதில்லை என்று 'விஸ்வாசம்' படக்குழு முடிவு செய்திருக்கிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மூன்றாவது போஸ்டரில் ‘பொங்கலுக்கு பராக்’ என்று அறிவித்து, பொங்கல் வெளியீட்டை உறுதிப்படுத்தியது.

இதனால் பொங்கல் வெளியீட்டில் உறுதி செய்திருந்த 'விஸ்வாசம்', 'வந்தா ராஜாவாதான் வருவேன்', 'வாட்ச்மேன்' ஆகிய படங்கள் பின்வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது 'விஸ்வாசம்' பொங்கல் வெளியீடு உறுதி என்று தயாரிப்பாளர் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக விநியோகஸ்தர்கள் மத்தியில் விசாரித்தபோது, “இரண்டு பெரிய படங்கள் வெளியாகலாம். தமிழகத்தில் அந்தளவுக்கு திரையரங்குகள் இருக்கின்றன. 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' வெளிவந்தால் பிரச்சினை இருக்காது. கூடுதலாக ஏதாவது ஒரு படம் வெளிவந்தால் கூட திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் இருக்கும்.

தற்போதைக்கு 'பேட்ட' அறிவித்தவுடன், மீதமுள்ள படங்கள் பின்வாங்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், 'விஸ்வாசம்' படக்குழுவினர் தரப்பிலிருந்து பொங்கல் வெளியீட்டை எங்களுக்கு உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். மீதமுள்ள படக்குழுவினர் போஸ்டரில் அறிவித்தாலும், எங்களுக்கு முறையான அறிவிப்பு இன்னும் வரவில்லை.

ஆகையால், முதன்முறையாக ரஜினி மற்றும் அஜித் படங்கள் நேரடியாக மோதவுள்ளன. இப்போதைக்கு இரண்டுமே பின்வாங்கவில்லை. அஜித் படத்துக்கு முதல் நாள் ஓப்பனிங் பிரமாண்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ரஜினி படத்துடன் வரும்போது அந்த ஓப்பனிங் கொஞ்சம் குறையலாம் என நினைக்கிறோம்.

சமீபகாலமாகத்தான் தமிழ்த் திரையுலகிற்கு பொற்காலமாக இருக்கிறது. வரும் படங்கள் அனைத்துமே நல்ல லாபத்தைக் கொடுக்கின்றன. அடுத்தாண்டு தொடக்கத்தில் ரஜினி மற்றும் அஜித் படங்கள் ஒரே நாளில் வருவதால், போட்டி கடுமையாக இருந்தாலும் எங்களுக்கு நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்கள்.

'பேட்ட' படத்தில் ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, சசிகுமார், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள்.

சிவா இயக்கத்தில். அஜித் நடித்திருக்கும் 'விஸ்வாசம்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இவ்விரண்டு படங்களுமே டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக டீஸர், ட்ரெய்லர், பாடல்கள் என தொடர்ச்சியாக விளம்பரப்படுத்தத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

மேலும்