விஜய்யுடன் நடிக்கிறேன்: ஒப்புக்கொண்ட விவேக்

By செய்திப்பிரிவு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்தில், அவருடன் இணைந்து நடிக்க இருப்பதாக விவேக் ஒப்புக் கொண்டுள்ளார்.

‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் விஜய். இப்படத்தை அட்லீ இயக்குகிறார். ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஜய் - அட்லீ கூட்டணி இணைகிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த 14-ம் தேதி வெளியிடப்பட்டது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணுவும் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

சண்டை வடிவமைப்பாளராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக், எடிட்டராக ரூபன், கலை இயக்குநராக முத்துராஜ் ஆகியோர் பணிபுரிய உள்ளனர் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தொழில்நுட்பக் கூட்டணி அப்படியே ‘மெர்சல்’ படத்தில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் நாயகி மற்றும் வில்லன் உள்ளிட்டவற்றை படக்குழு அறிவிக்கவில்லை.

படத்தில் காமெடி நடிகர் விவேக் நடிக்கிறார் என்றொரு தகவல் பரவி வந்தது. இந்நிலையில், கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட விவேக்கிடம், ‘தளபதி 63 படத்தில் நடிக்கிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. ‘நிச்சயமாக நடிக்கிறேன்’ என அவர் பதிலளித்துள்ளார்.

விஜய் - விவேக் கூட்டணி ‘நேருக்கு நேர்’, ‘குஷி’, ‘ஷாஜகான்’, ‘யூத்’, ‘திருமலை’ உள்ளிட்ட 11 படங்களில் நடித்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் 12-வது முறையாக இருவரும் இணைந்து நடிக்கின்றனர். அடுத்த வருடம் (2019) தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்