டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஸ்ருதி ஹாசன்

By செய்திப்பிரிவு

சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்குகிறார் ஸ்ருதி ஹாசன்.

நடிகை, பின்னணிப் பாடகி, இசையமைப்பாளர் எனப் பல திறமைகள் கொண்டவர் ஸ்ருதி ஹாசன். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சிங்கம் 3’. அதன்பிறகு தெலுங்கில் ‘கட்டமராயுடு’ படமும், இந்தியில் ‘பெஹன் ஹோஹி டெரி’ படமும் வெளியாகின.

சுந்தர்.சி இயக்குவதாக இருந்த ‘சங்கமித்ரா’ படத்தில், ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக இருந்தது. இதற்காகத் தனிப் பயிற்சியாளரை வைத்து வாள் சண்டை கூட கற்றுக் கொண்டார். ஆனால், படம் தொடங்குவது தாமதமானதால், படத்தில் இருந்து விலகினார்.

கமல்ஹாசன் இயக்கி, நடித்து பாதியிலேயே நிற்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் ஸ்ருதி ஹாசனும் நடிக்கிறார். ஆனால், இந்தப் படம் எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை. மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கத்தில், வித்யுத் ஜம்வால் ஜோடியாக நடித்துள்ள இந்திப் படம்தான் தற்போதைக்கு ஸ்ருதி கையில் இருக்கும் ஒரே படம்.

இந்நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் இருக்கும் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் ஸ்ருதி ஹாசன். ‘ஹலோ சகோ’ என்ற நிகழ்ச்சி, விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. விஷால், பிரசன்னாவைத் தொடர்ந்து ஸ்ருதி ஹாசன் என சினிமா நடிகர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது சன் டிவி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்