“நீங்கள் ரியல் ஹீரோ விஜய் சேதுபதி”: தயாரிப்பாளர் பாராட்டு

By செய்திப்பிரிவு

‘நீங்கள் ரியல் ஹீரோ விஜய் சேதுபதி’ என தயாரிப்பாளர் ஹிதேஷ் ஜபக் பாராட்டியுள்ளார்.

சி.பிரேம் குமார் இயக்கத்தில் இன்று (அக்டோபர் 4) ரிலீஸாகியுள்ள படம் ‘96’. விஜய் சேதுபதி, த்ரிஷா ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில், தேவதர்ஷினி, ஜனகராஜ், 'ஆடுகளம்' முருகதாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கோவிந்த் மேனன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் ரிலீஸாவதற்கு முன்பு பைனான்ஸ் பிரச்சினையால் சிக்கித் தவித்தது. எனவே, இந்தப் படத்துக்காகத் தான் வாங்கிய சம்பளம் 3 கோடி ரூபாய் மட்டுமின்றி, தன் கையில் இருந்தும் 1 கோடி ரூபாயைக் கொடுத்து பிரச்சினையைத் தீர்த்து, படம் ரிலீஸாக விஜய் சேதுபதி உதவினார்.

இதனால், தயாரிப்பாளர்கள் மத்தியில் விஜய் சேதுபதிக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. ‘நான் அவன் இல்லை’, ‘அஞ்சாதே’, ‘மீகாமன்’, ‘டோரா’, ‘டிக் டிக் டிக்’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ள ஹிதேஷ் ஜபக், விஜய் சேதுபதியைப் பாராட்டியுள்ளார்.

“வாழ்த்துகள் விஜய் சேதுபதி. ‘96’ திரைப்படத் தயாரிப்பாளருக்கு செய்த பண உதவிக்காக மட்டுமல்ல. உங்களுடைய நல்ல நோக்கம்தான் இதில் பெரிது. சூழ்நிலைகளைத் தவிர எந்த ஒரு தயாரிப்பாளரும் தர்மசங்கடம் அடைவதை விரும்ப மாட்டார்கள். ரியல் ஹீரோ நீங்கள். இவரைப்போன்ற தனிநபர்களால்தான் தனித்த தயாரிப்பாளர்கள் இருக்கின்றனர். இதுதான் சேது வழி!” எனத் தெரிவித்துள்ளார் ஹிதேஷ் ஜபக்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

27 mins ago

உலகம்

37 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்