பைலட்டை மணக்கிறார் சுவாதி

By செய்திப்பிரிவு

தெலுங்கில் ‘டேஞ் சர்’ திரைப் படம் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தவர், 2008-ல் ‘சுப்பிரமணியபுரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ‘கனிமொழி’, ‘போராளி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘வடகறி’ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களிலும், தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வந்தார். இதற்கிடையில், விமான பைலட்டான விகாஸ் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில், பெற்றோர் சம்மதத்துடன், தன் நீண்டநாள் காதலரை அவர் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

இவர்களது திருமணம் மிக எளிய முறையில் ஹைதராபாத்தில் வரும் 30-ம் தேதியும், வரவேற்பு நிகழ்ச்சி கொச்சியில் செப்டம்பர் 2-ம் தேதியும் நடக்க உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த விகாஸ், மலேசியா ஏர்லைன்ஸில் பைலட்டாக இருக் கிறார். அவர் தற்போது இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் பணியாற்றுவதால், திருமணத்துக்குப் பிறகு சுவாதியும் இந்தோனேசியா சென்றுவிடுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்