சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாகத் தயாரிக்கும் பா.இரஞ்சித்

By செய்திப்பிரிவு

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை, வெப் சீரிஸாகத் தயாரிக்க இயக்குநர் பா.இரஞ்சித் முடிவு செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி என்கிற சில்க் ஸ்மிதா. முதலில் மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கி, பின்னர் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நிறைய படங்களில் நடித்தார். ஓரிரு இந்திப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

சில்க் ஸ்மிதா கடைசியாக நடித்த படம் ‘சுபாஷ்’. அர்ஜுன் ஹீரோவாக நடித்த இந்தப் படம், 1996-ம் ஆண்டு ரிலீஸானது. அந்த வருடம் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார் சில்க் ஸ்மிதா. அப்போது அவருக்கு 35 வயது.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு, இந்தியில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக வெளியானது. சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்தார். இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. சிறந்த ஒப்பனைக் கலைஞர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் என மேலும் இரண்டு தேசிய விருதுகளையும் இந்தப் படம் பெற்றது.

‘டர்ட்டி பிக்சர்: சில்க் சக்கத் ஹாட்’ என்ற பெயரில் கன்னடத்திலும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி, ஹிட் ஆனது. பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், சில்க் வேடத்தில் நடித்தார். மேலும், மலையாளத்திலும் சனா கான் நடிப்பில் ‘க்ளைமாக்ஸ்’ என்ற பெயரில் படமாக வெளிவந்தது.

இந்நிலையில், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் வெப் சீரிஸாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தயாரித்துள்ள பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் இந்த வெப் சீரிஸைத் தயாரிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

வணிகம்

3 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

ஆன்மிகம்

17 mins ago

விளையாட்டு

22 mins ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்