‘விஸ்வரூபம் 2’ படத்தில் மக்கள் நீதி மய்யத்தின் நியூஸ் ரீல் ஏன்?- கமல்ஹாசன் விளக்கம்

By செய்திப்பிரிவு

‘விஸ்வரூபம் 2’ படத்தில் மக்கள் நீதி மய்யத்தின் நியூஸ் ரீல் இடம்பெற்றது ஏன்? என்பதற்கு கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

கமல்ஹாசன் தயாரித்து, நடித்து, இயக்கியுள்ள படம் ‘விஸ்வரூபம் 2’. பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம், உலகம் முழுவதும் நேற்று வெளியானது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் தொடக்கத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியைக் கமல்ஹாசன் எப்படித் தொடங்கினார் என்பது நியூல் ரீலாகக் காண்பிக்கப்படுகிறது. இதனால், கமல்ஹாசன் திட்டமிட்டுத் தன் கட்சியை மக்களிடம் திணிக்கிறார் என விமர்சனம் எழுந்தது.

இந்த விமர்சனத்துக்கு கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். “மக்கள் நீதி மய்யத்தின் நீயூஸ் ரீல் இனி எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படும் என்பதற்கு முன்னுதாரணமாக ‘விஸ்வரூபம் 2’ படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், திரைக்கதையில் அதைத் தொடர்புபடுத்த மாட்டேன்.

அதேசமயம், எங்கு மேடை கிடைத்தாலும், அங்கு பயன்படுத்துவேன். ஆனால், படத்தின் கதையில் மய்யத்தைக் கலக்க மாட்டேன். ‘ஹேராம்’, ‘விருமாண்டி’ படங்களிலேயே எனது கொள்கைகள் இடம்பெற்றிருக்கின்றன. மக்கள் நீதி மய்யம், தனது பணியைச் செய்துகொண்டு இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்