பைலட்டைத் திருமணம் செய்கிறார் ‘சுப்ரமணியபுரம்’ சுவாதி

By செய்திப்பிரிவு

தன்னுடைய காதலரான பைலட் விகாஸைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் ‘சுப்ரமணியபுரம்’ சுவாதி.

நடிகை சுவாதி ரெட்டி, கேரளாவைச் சேர்ந்த விகாஸ் என்பவரைத் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். ஹைதராபாத் நகரில் ஆகஸ்ட் 30 அன்று திருமணமும், செப்டம்பர் 2-ம் தேதி அன்று கொச்சியில் வரவேற்பும் நடைபெறவுள்ளது.

சுவாதி ரெட்டி, முதலில் மா டிவியில் கலர்ஸ் என்கிற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். கலர்ஸ் சுவாதி என்றே ஆந்திரம் முழுவதும் பிரபலமானார். தொடர்ந்து 'டேஞ்சர்' என்கிற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார்.

பிறகு, செல்வராகவன் இயக்கத்தில் 'ஆடவாரி மாடலக்கு அர்த்தாலே வேறுலே' (தமிழில் யாரடி நீ மோகனி) படத்தில் நாயகியின் தங்கை கதாபாத்திரத்தில் அவர் நடித்தது விமர்சகர்களிடம் நற்பெயரைப் பெற்றுத் தந்தது.

தமிழில் 'சுப்ரமணியபுரம்' படத்தில் நாயகியாக அறிமுகமானார். அடுத்தடுத்து தெலுங்கில் மட்டுமே நடித்து வந்தாலும், தமிழில் அவ்வபோது, 'போராளி', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', ’வடகறி', 'யட்சன்', 'யாக்கை' என சில படங்களில் நடித்தார். நடுவில் மலையாளத்தில் இவர் அறிமுகமான 'ஆமென்' படமும் சூப்பர் ஹிட்டானது.

தற்போது தனது காதலரான விகாஸை சுவாதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். விகாஸ் மலேசியன் ஏர்லைன்ஸில் பைலட்டாகப் பணிபுரிகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

4 mins ago

தொழில்நுட்பம்

8 mins ago

தமிழகம்

12 mins ago

சினிமா

20 mins ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

34 mins ago

வணிகம்

40 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

57 mins ago

மேலும்