ரஜினி படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது!

By செய்திப்பிரிவு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். ஊட்டியில் கதை நிகழும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, டேராடூன், டார்ஜிலிங் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

ரஜினியுடன் இணைந்து நவாஸுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறார் ரஜினி. படத்தில் அவருடைய கேரக்டர் பெயர், காளி.

டேராடூன், டார்ஜிலிங்கைத் தொடர்ந்து, மூன்றாம்கட்ட படப்பிடிப்பு சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் தொடங்கியுள்ளது. ரஜினி - விஜய் சேதுபதி சம்பந்தப்பட்டக் காட்சிகளை இங்கு படமாக்குகின்றனர். இதைத் தொடர்ந்து லடாக்கில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக சென்னைக்கு அருகில் உள்ள ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் செட் அமைக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

தமிழகம்

16 mins ago

இந்தியா

28 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்