திரை விமர்சனம்: பியார் பிரேமா காதல்

By செய்திப்பிரிவு

நல்ல வேலையில் இருக்கும் இளை ஞன் ஹரீஷ் கல்யாண். பக்கத்து அலுவலகத்தில் பணியாற்றும் ரைஸா வில்சனை காதலிக்கிறான். பணக் கார குடும்பத்தைச் சேர்ந்த ரைஸா, நவீ னப் பார்வையும், சுதந்திர சிந்தனையும் கொண்டவள். அவளது சுதந்திரத்தை முழுமையாக மதிப்பவர், சல்சா நடனப் பயிற்சியாளரான தந்தை ஆனந்த் பாபு. ஹரீஷின் அப்பாவித்தனத்தால் ஈர்க்கப்படும் ரைஸா, அவனுடன் நட் பாகப் பழகுகிறாள். அந்த நட்பு, உட லுறவில் முடிகிறது. ஒரு கட்டத்துக்குப் பிறகு, திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழ (லிவிங் டுகெதர்) தொடங்குகின்றனர். வீட்டில் பெண் பார்க்கும் படலம் தொடங்குவதால், ரைஸாவை உடனடியாக திருமணம் செய்துகொள்ளத் துடிக்கிறான் ஹரீஷ். ‘வெற்றிகரமான உணவக முதலாளி ஆக வேண்டும் என்பது வாழ்நாள் லட்சியம். அதுவரை திருமணம் இல்லை’ என்பதில் உறுதியாக இருக்கிறாள் ரைஸா. சேர்ந்தார்களா, நிரந்தரமாகப் பிரிந்தார்களா என்பது மீதிப் படம்.

தொடக்கம் முதல் இறுதிவரை பல் வேறு முரண்களை உருவாக்கி இருப்ப தோடு, இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறையை, அலுவலக நடை முறைகளை பிரதிபலிப்பதன் மூலம் படத்தை பெருமளவு சுவாரசியமாக நகர்த்திச் செல்கிறார் அறிமுக இயக்குநர் இளன். திருமண வாழ்க்கையின் அவ சியத்தை நாயகன் தரப்பில் இருந்தும், சேர்ந்து வாழ்தலே சரியானது என் பதை நாயகியின் தரப்பில் இருந்து புரியவைப்பது மட்டுமின்றி, இதில் எந்த பக்கமும் சாயாமல் நடுநிலையோடு பயணிப்பதும் படத்தை ஒரு தரமான தடத்தில் அழைத்துச் செல்கிறது.

ஒரு நடுத்தரக் குடும்ப இளைஞன் முற்றிலும் வேறு வாழ்க்கைச் சூழலில் இருந்து வரும் பெண்ணின் தோற்றத் தால் கவரப்பட்டு, அவளது குணமும் பிடித்துப்போகிறது. அதேநேரம் வாழ்க்கை, உடலுறவு, திருமணம் போன்றவற்றில் அவளது பார்வையுடன் உடன்பட முடியாமல் இருக்கும் இரண் டும்கெட்டான் சூழலை கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது திரைக்கதை. பொது வாக இதுபோன்ற சிக்கல்களைக் கையா ளும்போது பெண்களை பிரச்சினைக்கு உரியவர்களாக சித்தரிப்பது தமிழ் சினிமாவின் வழக்கம். இந்தப் படம் ஒரு கட்டம் வரை அதற்கு மாறாக இருக்கிறது.

படத்தில், பெண்களைத் திட்டுகிற, இழிவுபடுத்துகிற காட்சிகள், வசனங்கள் எதுவும் இல்லை. மாறாக, சாதாரண குடும்பத்தில்கூட டி.வி பார்க்கும் அம்மாவுக்கு, அப்பா தோசை சுட்டுத் தருவது போன்ற வரவேற்கத்தக்க மாற்றங்களை ஆங்காங்கே இயல்பாகப் பொருத்தியிருப்பதை ரசிக்க முடிகிறது.

ஹரீஷ் - ரைஸா இடையிலான முரணை வைத்து மட்டுமே திரைக்கதை நகர்வதால், ஒரு கட்டத்துக்கு மேல் படம் தொய்வடைகிறது.

அப்பாவி பையனாய் அழகு முகம் காட்டுகிறார் நாயகன் ஹரீஷ். காதல் மொழி, அம்மாவிடம் பாச மழை, காதலிக் காக ஏங்குவது, அவரிடம் அடங்கிப் போவது என பாத்திரத்தை உள்வாங்கி பாந்தமாய் செய்கிறார். நாயகி ரைஸா வுக்கு வலுவான பாத்திரம். மேலோட்ட மான காதல் மனநிலையில் இருந்து, அடுத்த கட்டத்துக்கு நகரும்போது அவரிடம் வெளிப்படும் உடல்மொழி, தனக்கான சுயம் இழந்து போவதுபோல் உணரும்போது வரும் படபடப்பு, தனக்கானவனை இழந்து நிற்கும்போது வரும் வெறுமை எல்லாவற்றையும் உணர்ந்து உள்வாங்கி நடித்திருக்கிறார்.

மகளுக்கு அதீத சுதந்திரம் அளிக்கும் மாடர்ன் தந்தையாக ஆனந்த்பாபு. மகளை ‘லிவிங் டுகெதராக’ வாழ விட்டு, ஒதுங்கி நிற்கும் பொறுப்புள்ள (???) தந்தையாக நடித்திருக்கிறார். அவர் பேசும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் சகட்டுமேனிக்கு வாங்கிக் கட்டிக்கொள்கிறார்.

நாயகனின் பெற்றோராக வரும் ரேகா - பாண்டியனும் பாத்திரத்தின் தேவையை நிறைவேற்றுகின்றனர். நாயகனின் வழிகாட்டியாக வரும் ராம தாஸ் மற்றும் அலுவலக நண்பனாக வருபவர் சிரிக்க வைப்பதில் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

படங்களில் ஹீரோவின் காதலுக்கு ஐடியா சொல்ல ஒரு மாமா இருப்பார். இந்த படத்தில் அது முனீஸ்காந்த். சும்மா சொல்லக்கூடாது.. காமெடியன்கள் இல்லாத குறையை தீர்த்துவைக்கிறார்.

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பாளராக அவதாரம் எடுத் திருக்கிறார். அவரது இசையில் பாடல் கள் கேட்க நன்றாக இருப்பதோடு, காட்சிப்படுத்தப்பட்ட விதத்தாலும் கவர் கின்றன. பின்னணி இசை உணர்வுபூர்வ மான காட்சிகளுக்கு வலுசேர்க்கிறது. ராஜா பட்டாசார்ஜியின் ஒளிப்பதிவும், மணிகுமாரின் படத்தொகுப்பும் படத் துக்கு பக்க பலம். காட்சிகள், பாடல்களின் நவீனத்தன்மைக்கு கலை இயக்குநர், ஆடை வடிவமைப்பாளரின் பங்களிப்பை பாராட்டியாக வேண்டும்.

சினிமாத்தனமான அலுவலக சூழல், இயல்பாய் பயணிக்கும் கதையில் சினிமாத்தன கிளைமாக்ஸ், சில பல இடங்களில் ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘ஓ காதல் கண்மணி’ படங் களை ஞாபகப்படுத்துவது.. இதுபோன்ற சின்னச் சின்ன குறைகளும் உண்டு. அதையும் தாண்டி, சொல்ல வந்ததை நேர்த்தியாய் சொன்ன விதத்தில் நெஞ்சை அள்ளுகிறது இந்த காதல் கதை. ‘பியார் பிரேமா காதல்’ - இன்றைய தலைமுறைக்காக இன்னு மொரு ரியலிஸ்டிக் காதல்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

சுற்றுச்சூழல்

25 mins ago

தமிழகம்

56 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்