பிக் பாஸ் 2: ”ஒத்தைக்கு ஒத்த வர்றியா?” - பொன்னம்பலத்துக்கு ஒரு நியாயம் மஹத்துக்கு ஒரு நியாயமா?

By செய்திப்பிரிவு

நேற்றைய தினம் (58ஆம் நாள்) வழக்கம் போல இந்த வாரத்துக்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் பிக் பாஸ் மூலம் கொடுக்கப்பட்டது.

வீட்டில் உள்ளவர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டனர். டேனியல், பாலாஜி, ஐஸ்வர்யா, யாஷிகா, ரித்விகா ஒரு அணியிலும் மும்தாஜ், மஹத், வைஷ்ணவி, சென்றாயன், ஜனனி ஒரு அணியிலும் இருக்க வேண்டும்.

ஒரு குழாய் மூலம் பொம்மை செய்வதற்கான மூலப் பொருட்கள் வீட்டுக்குள் அனுப்பப்படும். குழாயின் இருபக்கமும் இரு அணிகளும் நின்று கொண்டு வரும் பொருட்களை சேகரிக்க வேண்டும்.

எந்த அணியினர் அதிக பொருட்களை சேகரித்து அதிக பொம்மைகளை செய்கிறார்களோ அவர்களே இறுதியில் வெற்றி பெறுவார்கள்.

தைக்கப்பட்ட பொம்மைகளை மும்தாஜும் பாலாஜியும் தரம் பிரிக்க வேண்டும்.

அதன் படி சைரன் ஒலித்தவுடன் இரு அணிகளும் ஓடிச் சென்று குழாயின் இரு பக்கமும் நின்று கொண்டு பொருட்களை சேகரிக்க தொடங்கினார்கள்.

வழக்கம்போல டாஸ்க்கின் போது மட்டும் சுறுசுறுப்பாகி விடும் மஹத் குழாயின் மறுபுறம் நின்ற டேனியை பிடித்து தள்ளிவிட்டுக் கொண்டே பொருட்களை சேகரித்தார்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த டேனியல் மஹத்தின் கையை பிடித்து “எதுக்கு மேல கை வைக்குற” என்று  கேட்டார். உடனே பொங்கியெழுந்த மஹத் டேனியல் அணியின் இடத்துக்கு வந்து அவரது நெஞ்சின் மீது கையை வைத்து தள்ளினார்.

பாலாஜி, ரித்விகா, சென்றாயன் ஆகியோர் தடுத்தும் “ஒத்தைக்கு ஒத்த வர்றியா.. அடிச்சி நாக்-அவுட் பண்ணிடுவேன்” என்றபடி அடிக்க பாய்ந்தார்.

பிக் பாஸ் வீட்டின் விதிமுறையின் படி ஒருவரை தாக்குவது விதிமீறல். கடந்த வாரம் பொன்னம்பலம் ஐஸ்வர்யாவின் கழுத்தை பிடித்து நீச்சல் குளத்தில் தள்ளியதால் அவரை இரண்டு நாட்கள் வீட்டின் உள்ளே வரவிடாமல் தண்டித்தார் பிக்பாஸ். அதுவும் கூட டாஸ்க்குக்காகதான் பொன்னம்பலம் அப்படி செய்தாரே தவிர தனிப்பட்ட முறையில் அல்ல.

ஆனால் மஹத் நேற்று நடந்து கொண்டது முழுக்க முழுக்க தனிப்பட்ட குரோதத்தை வெளிப்படுத்தும்படியாகவே இருந்தது. டாஸ்க் முடிந்த பிறகும் கூட “நான் அப்படித்தான் செய்வேன்” என்று தோனியிலேயே பேசிக் கொண்டிருந்தார்.

மற்ற நேரங்களில் தொய்வுடனும், தூங்கிக் கொண்டும் இருக்கும் மஹத்திற்கு இது போன்ற சமயங்களில் எங்கிருந்து சுறுசுறுப்பு வருகிறது என்று தெரியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

41 mins ago

சினிமா

13 mins ago

சினிமா

37 mins ago

சுற்றுச்சூழல்

53 mins ago

சினிமா

50 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

8 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்