சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா

By செய்திப்பிரிவு

சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘எஸ்.கே. 13’ படப்பிடிப்பில் இணைந்துள்ளார் நயன்தாரா.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகி வரும் படம் ‘சீம ராஜா’. பொன் ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். சூரி, நெப்போலியன், சிம்ரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, கெஸ்ட் ரோலில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 13-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவருடைய 13-வது படமான இதற்கு இன்னும் பெயர் வைக்கப்படாததால் ‘எஸ்.கே. 13’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து இருவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.

‘எஸ்.கே. 13’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், இன்று முதல் ஷூட்டிங்கில் நயன்தாராவும் இணைந்துள்ளார். படக்குழு சார்பில் இந்தத் தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

நயன்தாரா நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘கோலமாவு கோகிலா’ படம் வருகிற வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) திரைக்கு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்