அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை

By செய்திப்பிரிவு

அதர்வா நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஸ்ரீகணேஷ், ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தைத் தொடர்ந்து அதர்வா நடிப்பில் ‘குருதி ஆட்டம்’ படத்தை இயக்க இருக்கிறார்.

ராக்ஃபோர்ட் எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். யுவனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

மேலும், தன்னுடைய ‘யு1 ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் மூலம் இசை உரிமையையும் பெற்றுள்ளார். ‘குருதி ஆட்டம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

அதர்வா நடிப்பில் நேற்று (ஆகஸ்ட் 30) ‘இமைக்கா நொடிகள்’ படம் ரிலீஸாகியுள்ளது. ‘பூமராங்’, ‘ருக்குமணி வண்டி வருது’, ‘ஒத்தைக்கு ஒத்த’, ‘100’ ஆகிய படங்கள் தற்போது அதர்வா கைவசம் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 mins ago

தமிழகம்

40 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்