சாமி ஸ்கொயர் படத்தின் கதை: ஹரி விளக்கம்

By செய்திப்பிரிவு

பெருமாள் பிச்சை குடும்பத்துக்கும், ஆறுச்சாமி குடும்பத்துக்கும் நடக்கும் பிரச்சினைகள் தான் 'சாமி ஸ்கொயர்' படத்தின் கதை என்று  இயக்குநர் ஹரி கூறியுள்ளார்.

ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாமி ஸ்கொயர்’. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஷிபு தமீன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் ஹரி பேசியதாவது:

’தமிழ்’ படம் பார்த்துவிட்டு விக்ரம் சார் கூப்பிட்டார். இந்த மாதிரி ஒரு படம் பண்ணணும் என்றவுடன், ஒரு சின்ன லைன் மட்டும் சொன்னேன். கவிதாலயா நிறுவனத்திலிருந்து போன் பண்ணாங்க. ’சாமி’ படம் பண்ணினோம். அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே ‘அருள்’ என்ற அடுத்த படமும் கொடுத்தார்.

இப்படத்துக்காக நிறைய செலவு பண்ணியிருக்கோம். 15 கார்கள் வரை விலைக்கு வாங்கி உடைத்திருக்கிறோம். ஏனென்றால் சுமோ இல்லாமல் நம்மால் வாழவே முடியாது. அதிக செலவும் என்பதால் படப்பிடிப்பு நாட்களையும் குறைத்து, பணத்தை மிச்சப்படுத்தியிருக்கிறேன். தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸிடம் படம் பண்ணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

’சாமி’ படத்தின் முடிவில் ‘சாமியின் வேட்டை தொரும்’ என்று போட்டிருப்பேன். அதைத் தொடர்வதற்கு சின்ன லைனாக வைத்திருந்தேன். தொடர்ச்சியாக போலீஸ் படங்கள் எடுத்ததால், ஒவ்வொன்றையும் அங்கெங்கு வைத்துவிட்டேன். நல்ல கதையாக அமைந்தால் தான் பண்ண முடியும் என்பதால் அமைதியாகவே இருந்தோம். பெருமாள் பிச்சை குடும்பத்துக்கும், ஆறுச்சாமி குடும்பத்துக்கும் நடக்கும் பிரச்சினைகள் தான் கதை. ஆனால் அது எப்படி என்பது சுவாரசியமான கமர்ஷியல் படமாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்