முத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடிக்கும் ‘தேவராட்டம்’

By செய்திப்பிரிவு

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு ‘தேவராட்டம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடிவீரன்’ படங்களை இயக்கியவர் முத்தையா. இவர் அடுத்ததாக இயக்கும் படத்திற்கு ‘தேவராட்டம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கெளதம் கார்த்திக், இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களைத் தொடர்ந்து ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் கெளதம் கார்த்திக் நடிக்கும் மூன்றாவது படம் இது. நிவாஸ் பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏற்கெனவே முத்தையா இயக்கிய படங்களில், சாதி பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரைத் தலைப்பாக வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன், கெளதம் கார்த்திக்கும் ‘முத்துராமலிங்கம்’ என்ற படத்தில் ஏற்கெனவே நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“அடல்ட் படங்கள் எடுப்பதில் தவறில்லை. ஆனால்...” - கிருத்திகா உதயநிதி வீடியோ பேட்டி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்