“தமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்” - விவேக்

By செய்திப்பிரிவு

‘தமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார் விவேக்.

வி.பி.விஜி தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘எழுமின்’. குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை கற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், விவேக் மற்றும் தேவயானி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய விவேக், “எனக்கு நல்லது செய்ய வேண்டும் என விஷால், கார்த்தி, சிம்புவைக் கூப்பிட்டேன். ஆனால், எல்லாரும் சேர்ந்து என்னை அரசியலில் கோத்து விடுகிறார்கள். தமிழ்நாட்டில் கொடி தான் பிரச்சினை. பல பேர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள். ‘எழுமின்’ என்ற வார்த்தை, சைனீஷ் மாதிரி இருக்கிறது என்று சொல்கிறார்கள். சிலர், ‘ஏழுமீன்’ என்றுகூட படிக்கிறார்கள்.

விளையாட்டில் திறமை இருந்தும், முன்னேறி வர முடியாமல் இந்தச் சமூகத்தில் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தப் படம் சமர்ப்பணம். விஷாலுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இங்கு வந்துள்ளார். நடிகர் சங்கக் கட்டிடத்திற்காக விஷால், கார்த்தி ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள்.

இந்த ட்ரெய்லர் வெளியீட்டுக்கு, இப்போது ட்ரெண்டில் இருக்கும் 3 பேர் வந்திருக்கிறார்கள். எனக்காக வந்த எல்லாருக்கும் நன்றி. என் படத்துக்குப் பிரச்சினை வந்தபோது, அப்போது இருந்த தயாரிப்பாளர் சங்கத்தால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஆனால், இனி அது இருக்காது. விஷால் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, முறைப்படுத்தி வருகிறார்” என்றார்.

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

“நிச்சயம் இந்தப் படத்தை என் மகளுக்குக் காண்பிப்பேன்” - கார்த்தி நெகிழ்ச்சி

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் அவார்ட்ஸ்

“ஆக்‌ஷன் ஹீரோ என்று சொல்லிக்கொள்ள எனக்கு வெட்கமாக இருக்கிறது” - விஷால்

“சாவித்ரிக்கு குடியைக் கற்றுக் கொடுத்தது அப்பா இல்லை” - கமலா செல்வராஜ் விளக்கம்

போதை மருந்து விற்கும் நயன்தாரா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

இந்தியா

17 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்