“எங்களுக்கும் கோபம் வரும்” - உதயநிதி ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

‘நல்ல படங்களுக்கு வரவேற்பு கொடுக்கவில்லை என்றால் எங்களுக்கும் கோபம் வரும்’ எனத் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

டான்ஸ் மாஸ்டரான தினேஷ், ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பைக் கதை’. காளி ரங்கசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக ‘வழக்கு எண் 18/9’ படத்தில் நடித்த மனிஷ யாதவ் நடித்துள்ளார். அஸ்லம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை, ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி, “விஜய் சார் நடித்த ‘குருவி’ படம் மூலமாகத் தயாரிப்பில் இறங்கி இதோ பத்து வருடங்கள் வெற்றிகரமாக ஓடிவிட்டன. இதில் நல்ல படங்கள், ஆவரேஜ் படங்கள், சில மட்டமான படங்களைக் கூட கொடுத்துள்ளோம். ஆனால், இந்தப் படம் ‘மைனா’ போல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு படம்.

நான் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் எப்படி சந்தானம் தொடர்ந்து எனது படங்களில் இடம்பிடித்தாரோ, அதேபோல தினேஷ் மாஸ்டரும் என் படங்களில் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொண்டேன். மாஸ்டராக இருக்கும்போது சரியான நேரத்திற்கு வந்தவர், இப்போ ஹீரோ ஆனதும் லேட்டா வர ஆரம்பிச்சுட்டார் போல... என்னை மாதிரி சில பேருக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்து, ‘என்னடா இவர்கள் இப்படி ஆடுறாங்க’ என, அந்தக் கோபத்திலேயே இந்தப் படத்தில் நல்லதாக நான்கு டான்ஸ் ஆடியிருப்பார் என நினைக்கிறேன்.

தப்பான படங்கள் கொடுத்தால் திட்டுகிறீர்கள், கழுவி ஊற்றுகிறீர்கள். அதேசமயம், நல்ல படங்களைக் கொடுக்கும்போது நீங்கள் எங்களுக்கான வரவேற்பைக் கொடுங்கள். இல்லாவிட்டால், எங்களுக்கும் கோபம் வரும்” என்றார்.

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

‘ஜூன் 7-ம் தேதி ‘காலா’ ரிலீஸாவது உறுதி; வதந்திகளை நம்ப வேண்டாம்’ - தயாரிப்பு நிறுவனம்

சந்தோஷ் நாராயணனுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த விஜய்

சூர்யா படத்துக்கு இசையமைக்கத் தொடங்கிய ஜீ.வி.பிரகாஷ்

ஆட்டோ டிரைவராக நடிக்கும் சாய் பல்லவி

“ஜெயலலிதா வேடத்தில் நான் நடிக்கவில்லை” - கீர்த்தி சுரேஷ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்