அஜித் பிறந்த நாளுக்கு ஸ்பெஷல் கேக் செய்த ஹாலிவுட் நடிகரின் மனைவி

By செய்திப்பிரிவு

ஹாலிவுட் நடிகர் செர்ஜ் க்ரோஸான் மனைவி, அஜித் பிறந்த நாளுக்காக ஸ்பெஷக் கேக் ஒன்றைச் செய்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவர் செர்ஜ் க்ரோஸான். ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள இவர், சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான ‘விவேகம்’ படத்திலும் நடித்துள்ளார்.

கடந்த 1 ஆம் தேதி அஜித்துக்குப் பிறந்த நாள். எனவே, செர்ஜ் க்ரோஸான் மனைவி ஸ்பெஷல் கேக் ஒன்றைச் செய்துள்ளார். ‘விவேகம்’ படத்தில் அஜித்தின் புகைப்படம் ஒன்றை வைத்து செய்யப்பட்டுள்ள இந்த கேக்கில், புகைப்படத்தின் கீழே 47 என்றும், அதற்கு கீழே ‘தல’ என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேக்கின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள செர்ஜ் க்ரோஸான், “அஜித்தின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பாரிஸில் இருந்து எங்கள் குடும்பமும் இணைந்து கொள்கிறது. மிகச்சிறப்பான கேக்கைச் செய்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய என் அன்பு மனைவிக்கு நன்றி. இந்தப் புகைப்படம் தான் ‘விவேகம்’ படத்தின் என்னுடைய ஃபேவரைட் காட்சி” என்று தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த ட்வீட்டுக்குப் பலர் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தனர். “அஜித் குமார் பிறந்த நாளுக்கு என்னுடைய மனைவி செய்த கேக் நேற்றில் இருந்து பிரபலமாகி விட்டது. உங்கள் வாழ்த்துகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்” என நேற்று பதிவிட்டுள்ளார் செர்ஜ் க்ரோஸான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

59 mins ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்