சன்னி லியோன் நடித்துவரும் ‘வீரமாதேவி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடித்துவரும் ‘வீரமாதேவி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘வீரமாதேவி’. ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில், சன்னி லியோன் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகிறார். நாசர், நவ்தீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அம்ரிஷ் இசையமைக்க, பொன்செ.ஸ்டீபன் தயாரிக்கிறார்.

வரலாற்றுப் படம் என்பதால், இந்தப் படத்துக்காக வாள் சண்டை, குதிரையேற்றம் போன்றவற்றை கற்றுக்கொண்டு, அதன்பிறகே படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சன்னி லியோன். அதுமட்டுமின்றி, இந்தப் படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் சன்னி. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

“இந்தப் படத்துக்குப் பிறகு என்னுடைய அடையாளம் நிச்சயம் மாறும். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க எனக்கு எப்போதுமே பிடிக்கும். இந்த மாதிரி கதைகளுக்காக சில வருடங்களாகவே காத்திருக்கிறேன். வி.சி.வடிவுடையான் இந்தக் கதையை எனக்கு சொன்ன போதிலிருந்தே நான் படத்துக்கு தயாராக ஆரம்பித்து விட்டேன்” என்கிறார் சன்னி லியோன்.

இந்நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இன்று வெளியாகியுள்ளது. அதில், குதிரையில் அமர்ந்துகொண்டே சன்னி ஆவேசமாக சண்டை போடுவது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. போர்க் கவசங்கள் அணிந்து, அழகிய ராணி போலக் காட்சியளிக்கிறார் சன்னி லியோன்.

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

முதல் பார்வை: காளி

“காளி படத்தைப் பார்க்க நிறைய காரணங்கள் வேண்டாம்; இந்த ஒண்ணு மட்டும் போதும்...” - கிருத்திகா உதயநிதி

‘மரகத நாணயம்’ இயக்குநரின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் அதர்வா

“நான் நடிகன் கிடையாது; எனக்கு நடிக்கத் தெரியாது” - விஜய் ஆண்டனி விறுவிறு பேட்டி

“அரசியல் பேசுபவர்கள் உடனே களத்துக்கு வந்துவிட வேண்டும்” - விஜய் ஆண்டனி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

23 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

49 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்